தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஏ.டி.சி., சாலையில் ஏற்பட்டுள்ள குழி வாகனங்கள் சென்றுவர இடையூறு

 ஏ.டி.சி., சாலையில் ஏற்பட்டுள்ள குழி வாகனங்கள் சென்றுவர இடையூறு

 ஏ.டி.சி., சாலையில் ஏற்பட்டுள்ள குழி வாகனங்கள் சென்றுவர இடையூறு


ADDED : பிப் 28, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை பகுதியில் மூடி சேத மடைந்து குழி ஏற்பட்டு' பேரிக்காடு' வைக்கப் பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற் படுகிறது.

ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிறுத்தம் வழியாக நாள்தோறும் அரசு பஸ்கள் உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஊட்டியில் இருந்து, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் இப்பகுதியில் நிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஏ.டி.சி., சாலையின் நடுவே, போலீஸ் 'அவுட் போஸ்ட்' அருகில், பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து குழி ஏற்பட்டுள்ளது. அதில், சாக்கடை தண்ணீர் தேங்கி உள்ளது. பாதுகாப்பு கருதி, போலீசார் 'பேரி கார்டு' வைத்துள்ளனர். இதனால், ரவுண்டானாவில் திரும்பும் வாகனங்களுக்கு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு, அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியை நகராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us