/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரியசோலை சாலையில் குழிகள்; பயணிக்கும் மக்கள் அதிருப்தி
/
கரியசோலை சாலையில் குழிகள்; பயணிக்கும் மக்கள் அதிருப்தி
கரியசோலை சாலையில் குழிகள்; பயணிக்கும் மக்கள் அதிருப்தி
கரியசோலை சாலையில் குழிகள்; பயணிக்கும் மக்கள் அதிருப்தி
ADDED : செப் 26, 2024 11:18 PM

கூடலுார் : கூடலுார் அருகே சேதமடைந்துள்ள தேவாலா -கரியசோலை சாலையை சீரமைக்க வேண்டும்.
கூடலுார், கோழிக்கோடு சாலை, தேவாலாவிலிருந்து கரியசோலை சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, வாளவயல், கரியசோலை, ராக்வுட் வழியாக, கூடலுார் சுல்தான்பத்தேரி சாலையில் இணைகிறது. இச்சாலை உள்ளூர் போக்குவரத்துக்கும், கேரளா மாநிலம், மலப்புரம் -வயநாடு இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இவ்வழியாக, உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி கேரளா வாகனங்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலை, பல இடங்களில், சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மழையின் போது, தேங்கும் மழை நீரால், சாலை தொடர்ந்து சேதமடைந்து வருகிறது.
சாலையில், வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாத ஓட்டுனர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'குறுகிய சாலையில், ஏராளமான குறுகிய வளைவுகளை கொண்டுள்ளது. தற்போது, சாலையும் சேதமடைந்து வருவதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுவதுடன், விபத்துகள் அபாயமும் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

