/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்
/
நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்
நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்
நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்
ADDED : ஜூலை 18, 2025 09:06 PM

கோத்தகிரி; கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 21வாடுகளுக்கு முறையே தண்ணீர் வினியோகிக்க, 'அம்ருத்-2.0' திட்டத்தில், 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த, நான்கு மாதங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகம் சாலை உட்பட, முக்கியமான சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டு, 'மெகா' குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்தும், குழிகள் மூடப்படவில்லை. இதனால், போக்குவரத்து நிறைந்த குறுகலான சாலைகளில், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்து செல்வோர், குழிகளில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் திட்ட பணியை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் செயல்படுத்துவதுடன், குழிகளை மூட நடவடிக்கை எடுப்பது அவசியம்.