/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு திட்டங்களில் நடைமுறை சிக்கல்; வருவாய்த்துறை சங்க மாநாட்டில் கருத்து
/
அரசு திட்டங்களில் நடைமுறை சிக்கல்; வருவாய்த்துறை சங்க மாநாட்டில் கருத்து
அரசு திட்டங்களில் நடைமுறை சிக்கல்; வருவாய்த்துறை சங்க மாநாட்டில் கருத்து
அரசு திட்டங்களில் நடைமுறை சிக்கல்; வருவாய்த்துறை சங்க மாநாட்டில் கருத்து
ADDED : ஆக 25, 2025 09:09 PM

குன்னுார்; உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது நடைமுறை சிக்கல்களை தீர்க்க, அந்தந்த மாவட்ட துறை ரீதியான நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும்,' என, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
குன்னுார் ஜான்ஸ் மண்டபத்தில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயலாளர் அப்துல் மஜீத் தலைமை வகித்தார். கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்து பேசினார். நில அளவை பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் காதர், கிராம நிர்வாக முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் தீபக் மனோபாலா, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தனி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது ; இந்த துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்புவது ; பணி பளுவை குறைத்து, உரிய கால அவகாசம் அளிப்பது; வருவாய் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குவது; தற்காலிக நியமனத்தை முற்றிலும் கை விடுவது; ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி வருவாய்த்துறை தினமாக அறிவித்து அரசாணை வெளியிடுவது,' உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கியமாக, 'உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு திட்டங்களை செயல்படுத்தும் போது, நடைமுறை சிக்கல்களை தீர்க்க, அந்தந்த மாவட்டங்களில் துறை ரீதியான நிர்வாகிகளை அழைத்து பேச, உயர் அதிகாரிகள் முன் வர வேண்டும்,' என, மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

