/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்பந்து விளையாட லண்டன் சென்ற மாணவருக்கு பாராட்டு
/
கால்பந்து விளையாட லண்டன் சென்ற மாணவருக்கு பாராட்டு
கால்பந்து விளையாட லண்டன் சென்ற மாணவருக்கு பாராட்டு
கால்பந்து விளையாட லண்டன் சென்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 29, 2025 10:52 PM

கோத்தகிரி; ஊட்டி அருகே கிராமத்தை சேர்ந்த மாணவர் கால்பந்து விளையாட லண்டன் சென்றார்.
ஊட்டி அருகே மைனலா கிராமத்தை சேர்ந்த கால்பந்து வீரர், உலிய தேவன் என்பவரின் பேரன் தீக் ஷித், 17. இவர், 2016 -2020 வரை, துானேரி அகலார் குருகுலம் பள்ளியில் பயின்றார். பள்ளி பருவத்தில், கால்பந்து மீது நாட்டம் கொண்ட மாணவனை பள்ளி நிர்வாகம் ஊக்குவித்தது.
கோத்தகிரி ஒரசோலை பி.எம்.எஸ்.சி., கால்பந்து பயிற்சியாளர் தீனுவிடம் பயிற்சி பெற்று, பல்வேறு இடங்களுக்கு சென்று விளையாடி சாதித்தார்.
குறிப்பாக, 2020ல் தனது, 11வது வயதில், பெங்களூருவில் நடந்த, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி, தனது திறமையை வெளிப்படுத்தி, கர்நாடக மாநில ' ஸ்டேட் பிளேயராக' தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அங்கு சிறப்பாக விளையாடிய, தீக் ஷித்தை 'கிக் ஸ்டார்ட்டர்' நிறுவனம் தங்களுடன் அழைத்து சென்றது. பள்ளி படிப்பை படித்து கொண்டு, வட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் விளையாடி அசத்தி வருகிறார்.
தற்போது, லண்டனில் நடக்கும், போட்டியில் பங்கேற்ற சென்ற அவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இவரின் தந்தை குமார் கூறுகையில், '' எனது மகன், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்க உள்ளதால், அவருடன் லண்டன் செல்கிறோம். அங்கு நடக்கும் போட்டிகளில் சாதனை செய்து திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.