/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயேசு கிறிஸ்து இறந்த பின் போர்த்திய துணியின் நகல் வைத்து பிரார்த்தனை

ADDED : மார் 25, 2025 09:21 PM

ஊட்டி; இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவர் மீது போர்த்திய துணியின் நகல், ஊட்டி தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிர்விட்ட பின்பு அவரை கல்லறையில் அடக்கம் செய்தனர். அப்போது அவர் மீது ஒரு வெள்ளை நிற துணியால் சுத்தி இயேசுவை அடக்கம் செய்தனர்.
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்தது. 14 அடிக்கொண்ட இந்த துணி தற்பொழுது வரை இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த துணியின் உண்மை தன்மையை அறிய, 6 நகல்கள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு அது உலகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டு உள்ளது.
அதன் ஒரு நகல் ஊட்டியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் தற்போது வைக்கப்பட்டது. ஊட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் சூசையப்பர் ஆலயத்திற்கு வந்து அந்த துணியை தொட்டு வணங்கி, பிரார்த்தனை செய்தனர்.