/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'விரைவான தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தயாராகுங்கள்': ராணுவ தலைமை தளபதி அறிவுரை
/
'விரைவான தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தயாராகுங்கள்': ராணுவ தலைமை தளபதி அறிவுரை
'விரைவான தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தயாராகுங்கள்': ராணுவ தலைமை தளபதி அறிவுரை
'விரைவான தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தயாராகுங்கள்': ராணுவ தலைமை தளபதி அறிவுரை
ADDED : மார் 26, 2025 08:57 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் வருகை தந்த, ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி, ராணுவ பயிற்சி கல்லுாரியில் கலந்துரையாடலில் பங்கேற்றதுடன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் அக்னி வீரர்களின் பயிற்சி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனுக்கு, 2 நாள் பயணமாக, ராணுவ தலைமை ஜெனரல் தளபதி உபேந்திரா திவேதி நேற்று முன்தினம் வருகை தந்தார். அன்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரில் நடந்த விழாவில், பல்வேறு சேவை புரிந்த, 3 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மூத்த சாதனையாளர் விருதை ராணுவ தளபதி வழங்கி கவுரவித்தார்.
நேற்று, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் நடந்த, 80வது பயிற்சி நிறைவுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, நம் நாடு மட்டுமின்றி, நட்பு நாடுகளின் முப்படை இளநிலை பயிற்சி அதிகாரிகளிடையே பேசினார்.
அதில், 'தேசிய பாதுகாப்பு; ராணுவத்தில் அதிநவீன செயல்பாடு; புவியியல் மற்றும் அரசியல் சவால்களை வெளிப்படுத்துதல்; நம் நாட்டின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறன்கள்; தொழில்நுட்ப தகவல்; செயல்பாட்டு கலை மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டின் முக்கிய அம்சங்கள்,' குறித்து பேசினார்.
அக்னி வீரர்களுக்கு பாராட்டு
கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் விரேந்திர வாட்ஸ் உட்பட அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்தி 'குரூப்' போட்டோ எடுத்தனர்.
முன்னதாக, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், (எம்.ஆர்.சி.) பயிற்சி பெறும் அக்னி வீரர்களுக்கான பயிற்சியை ராணுவ தலைமை தளபதி உபேந்திரா ஆய்வு செய்து, அனைத்து அணியினரின் அர்ப்பணிப்பு, தொழில்முறை பயிற்சிக்கு பாராட்டு தெரிவித்து பேசுகையில்,''அக்னிவீரர்கள் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
தற்போதைய தலைமுறையினர், உபகரணங்களை கையாள்வதில் திறமையானவர்களாக இருந்து, செயல்பட்டு தயார்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, எம்.ஆர்.சி.,குறித்து, தனது கருத்துக்களை புத்தகத்தில் பதிவு செய்து கையெழுத்திட்டார். ராணுவ மையத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சி குறித்து, எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் தெரிவித்தார்.