/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை! மாவட்டம் ழுழுவதும் 456 நிவாரண முகாம்
/
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை! மாவட்டம் ழுழுவதும் 456 நிவாரண முகாம்
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை! மாவட்டம் ழுழுவதும் 456 நிவாரண முகாம்
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை! மாவட்டம் ழுழுவதும் 456 நிவாரண முகாம்
ADDED : அக் 09, 2025 11:58 PM

ஊட்டி: நீலகிரியில் விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அனைத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும், 'ஏப்., முதல் மே மாதம் வரை கோடை மழை; ஜூன் முதல் ஆக ., மாதம் வரை தென்மேற்கு பருவமழை; செப்., மாதம் முதல் நவ., மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நடப்பாண்டில், கோடை மற்றும் தென்மேற்கு மழை, 10 செ.மீ., கூடுதலாக பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்க உள்ளது. மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில், 283 இடங்கள் பேரிடர் பகுதிகளாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.
அதில், 20 இடங்கள் அதிக பாதிப்பு பகுதிகளாக உள்ளது. 6 தாலுகா பகுதிகளில், 42 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 456 நிவாரண முகாம்கள் அந்தந்த பகுதியில் தயார் நிலையில் உள்ளன. அவசரக்கால பேரிடர் தடுப்பு பணிக்கு பயிற்சி தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
'மழை பொழிவு ஒட்டி உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பு,வடிகால் வாய்க்கால்களை சுத்திகரிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளுக்கான பயிற்சிகளை வழங்குதல், முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுதல்,' போன்ற வற்றை அந்தந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
50 ஆயிரம் மணல் மூட்டைகள் !
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பாக சாலை, குடியிருப்புகளில் ஏற்படும் மண் சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களை தடுத்து, தற்காலிக பணிகள் மேற்கொள்ள, உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை வாயிலாக மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில், 50 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க இருப்பதால், நெடுஞ்சாலை, வருவாய், தீயணைப்புத்துறை என அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், பேரிடர் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதிப்பு ஏதாவது நேரிட்டால் உடனே வருவாய் துறையினரை அணுகி நிவாரண முகங்களில் தங்கலாம். 1077 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.