/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி பேரகணி கிராமத்தில் இடுபொருட்கள் தயாரிப்பு செயல் விளக்கம்
/
கோத்தகிரி பேரகணி கிராமத்தில் இடுபொருட்கள் தயாரிப்பு செயல் விளக்கம்
கோத்தகிரி பேரகணி கிராமத்தில் இடுபொருட்கள் தயாரிப்பு செயல் விளக்கம்
கோத்தகிரி பேரகணி கிராமத்தில் இடுபொருட்கள் தயாரிப்பு செயல் விளக்கம்
ADDED : மார் 28, 2025 09:09 PM
கோத்தகிரி; கோத்தகிரி பேரகணி கிராமத்தில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தோட்டக்கலை அலுவலர் கவின் முன்னிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், பஞ்ச காவியா மற்றும் தசகாவியா உள்ளிட்ட, இடுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் திட்டத்தின் கீழ், தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் கோத்தகிரி பகுதியில், 50 நாட்கள் தங்கி, விவசாயிகள் மத்தியில் வேளாண் பணிகள் மற்றும் அனுபவங்களை கேட்டறிந்து, பயிற்சி அளித்து வருகின்றனர்.
பேரகணி கிராமத்தில் நடந்த இடுபொருள் தயாரிப்பு செயல் விளக்கம் நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.