/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜனாதிபதி வருகை: மசினகுடி ஹெலிபேடில் எஸ்.பி., ஆய்வு
/
ஜனாதிபதி வருகை: மசினகுடி ஹெலிபேடில் எஸ்.பி., ஆய்வு
ஜனாதிபதி வருகை: மசினகுடி ஹெலிபேடில் எஸ்.பி., ஆய்வு
ஜனாதிபதி வருகை: மசினகுடி ஹெலிபேடில் எஸ்.பி., ஆய்வு
ADDED : நவ 24, 2024 11:04 PM

கூடலுார்; ஜனாதிபதி வருகையை தொடர்ந்து, மசினகுடி ெஹலிபேட் தளத்தில் எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 27ம் தேதி ஊட்டி வருகிறார். 29ம் தேதி வரை ஊட்டி ராஜபாவனின் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 30ம் தேதி ஊட்டியில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்கிறார். இந்நிலையில், ஜனாதிபதி வருகையையொட்டி, நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி வரும் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிபேட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே, போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர் வருகையின் போது, காலநிலை மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் தரையிறங்க மசினகுடியில் உள்ள ஹெலிபேடை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மசினகுடி ஹெலிபேட் பகுதியில், நீலகிரி எஸ்.பி., நிஷா, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிபேட் பயன்படுத்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் மசினகுடியில் இறங்க முன் ஏற்பாடாக, இங்குள்ள ஹெலிபேட் பகுதியில் ஆய்வு நடந்தது,' என்றனர்.
குதிரை அணிவகுப்பு ஒத்திகை
ஊட்டிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 28ல் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சியில், உரையாற்றுகிறார். இவர், வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ராணுவு பயிற்சி கல்லுாரி நுழைவு வாயில்களில், குதிரைகள் அணி வகுப்புடன், ராணுவ மரியாதை அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.