/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு
/
புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு
ADDED : பிப் 12, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் ஆமைக் குளம் அருகே, புல் வெளியில் ஏற்பட்ட வனத்தீ உடனடியாக கட்டுப்படுத்தப் பட்டதால் பெரும் பாதிப்பு தடுக்கப்பட்டது.
கூடலுார் வனக்கோட்டத்தில் கோடை வறட்சி துவங்கியுள்ள நிலையில், வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆமைக்குளம், பாண்டியார் டான்டீ ஒட்டிய புல்வெளியில் திடீரென வனத் தீ ஏற்பட்டது. மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வன ஊழியர்கள் தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் வனத்தீ தடுக்கப்பட்டது. வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.