/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரம் உயரும் அரசு பள்ளி நுாற்றாண்டு விழாவில் பெருமை
/
தரம் உயரும் அரசு பள்ளி நுாற்றாண்டு விழாவில் பெருமை
தரம் உயரும் அரசு பள்ளி நுாற்றாண்டு விழாவில் பெருமை
தரம் உயரும் அரசு பள்ளி நுாற்றாண்டு விழாவில் பெருமை
ADDED : மார் 23, 2025 09:49 PM
குன்னுார் : குன்னுார் பேரட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் யசோதா தலைமை வகித்து பேசுகையில், ''நமது பள்ளி நமக்கு பெருமையாகும். மாணவ, மாணவியருக்கு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தி தரம் உயர்ந்து வருவதால், அரசு பள்ளிகளில் சேர்ந்து பயன்பெற கிராம மக்களும் பள்ளியின் மேம்பாடுக்கு உறுதுணையாக செயல்பட முன்வர வேண்டும்,''என்றார்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர் மாரிமுத்து, நுாற்றாண்டு சுடர் ஏந்தி வந்தார். முன்னாள் மாணவி ரஞ்சினி நுாற்றாண்டு விழா உறுதிமொழியை வாசித்தார். மாணவர்களின் நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, பாடல், சிலம்பம், தனிநடிப்பு, பேச்சு, மாறுவேடம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி, ஊர் தலைவர் நாகராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜு, முன்னாள் ராணுவ வீரர் நடராஜ், ஆசிரிய பயிற்றுனர்கள் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியை ரீனா வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் ரேணுகாதேவி, ஜோதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.