/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏழு பேருக்கு செயலாளர்களாக பதவி உயர்வு
/
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏழு பேருக்கு செயலாளர்களாக பதவி உயர்வு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏழு பேருக்கு செயலாளர்களாக பதவி உயர்வு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏழு பேருக்கு செயலாளர்களாக பதவி உயர்வு
UPDATED : ஆக 29, 2025 06:50 AM
ADDED : ஆக 28, 2025 10:34 PM
ஊட்டி, ; தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உதவி செயலாளர்களாக இருந்த, 7 பேருக்கு செயலாளர்களாக பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதில், வங்கி செயலாளர்கள் பணியிடம் நிரப்பாததால் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்கள் கூடுதல் பொறுப்பாக சங்கத்தை கவனித்து வந்தனர். 'இதற்கிடையே, உதவி செயலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்,' என , வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, 7 உதவி செயலாளர்களுக்கு, செயலாளராக பதவி உயர்வுக்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் வழங்கினார். இதில், உதவி செயலாளராக இருந்த மேத்யூ ஜான், மணி, ஆல்தொரை, தங்கமணி, காரி, பிரகாஷ், கிருஷ்ணப்பிரியா ஆகியோர் செயலாளராக பதவி உயர்வு பெற்று, வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தயாளன் கூறுகையில்,''மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலியாக உள்ள செயலாளர் பதவி, பதவி உயர்வு வாயிலாக படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 7 உதவி செயலாளர்களுக்கு செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,''என்றார்.