தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்

 ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்

 ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்


ADDED : ஜூன் 25, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி மிஷனரி ஹில்ஸ் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊட்டி ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொரோனா காலத்தில் ஆட்கள் பற்றாக்குறையை காரணமாக காட்டி மூடப்பட்டது. அதிகாரிகளிடம் கேட்ட போது, தற்காலிகமாக தான் மூடப்பட்டதாக தெரிவித்தனர். அதன் பின் இது நாள்வரை திறக்கப்படவில்லை. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவசர மருத்துவ சேவை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், இப்பகுதி மக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் திறக்க ஆவன செய்ய வேண்டும். இது தொடர்பாக, பொதுமக்கள் மாவட்ட கலெக் டரிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us