/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆரம்ப சுகாதார நிலையம்; மாவட்ட கலெக்டர் ஆய்வு
/
ஆரம்ப சுகாதார நிலையம்; மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 31, 2024 10:12 PM
கூடலுார் : உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
தமிழக அரசு சார்பில், 'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்' துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் மருந்து, மாத்திரைகள் இருப்பு, டாக்டர் மற்றும் செவிலியர்கள் செயல்பாடுகள், உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பதிவேடு பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மசினகுடி ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையம்; வாழை தோட்டத்தில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடையில் ஆய்வு செய்தார்.