/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதமர் மோடி கோவை வருகை ;சூலூரில் பா.ஜ.,வினர் ஆலோசனை
/
பிரதமர் மோடி கோவை வருகை ;சூலூரில் பா.ஜ.,வினர் ஆலோசனை
பிரதமர் மோடி கோவை வருகை ;சூலூரில் பா.ஜ.,வினர் ஆலோசனை
பிரதமர் மோடி கோவை வருகை ;சூலூரில் பா.ஜ.,வினர் ஆலோசனை
ADDED : மார் 14, 2024 11:13 PM
சூலுார்;கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், 20 ஆயிரம் பேர் பங்கேற்பது என, சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ., வினர் முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும், 18 ம்தேதி கோவை ஆர்.எஸ்., புரத்தில் நடக்கும் மக்கள் தரிசன நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., வினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் சூலுார் அடுத்த சிந்தாமணி புதூரில் நடந்தது.
இதில், சூலுார் சட்டசபை தொகுதியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பிரதமர் நிகழ்ச்சிக்கு, சூலுார் தொகுதியில் இருந்து, 20 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்பது என, முடிவு செய்யப்பட்டது.
மேலும், வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் பூத் வாரியாக வீடு, வீடாக சென்று மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டு சேகரிப்பது என, முடிவு செய்யப்பட்டது. மண்டல தலைவர்கள், மகேந்திரன், மகேஷ், சரவணன், ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

