/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளா காசர்கோடு கலெக்டர் இன்பசேகருக்கு விருது வழங்கிய பிரதமர்
/
கேரளா காசர்கோடு கலெக்டர் இன்பசேகருக்கு விருது வழங்கிய பிரதமர்
கேரளா காசர்கோடு கலெக்டர் இன்பசேகருக்கு விருது வழங்கிய பிரதமர்
கேரளா காசர்கோடு கலெக்டர் இன்பசேகருக்கு விருது வழங்கிய பிரதமர்
ADDED : ஏப் 27, 2025 09:16 PM

காசர்கோடு : கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பரப்பா ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பான முறையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதற்கான தேசிய விருதை, கலெக்டர் இன்பசேகருக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், பரப்பா ஊராட்சி ஒன்றியத்தில், 1.89 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் அனைவருக்கும், சுகாதாரம், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து, சிகிச்சை, கல்வி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், வேளாண்மை உள்பட அனைத்து துறைகளிலும் முழு சேவை கிடைத்துள்ளது.
பொது நிர்வாகத்தில் வளர்ச்சிப் பணிகளை முழுமையாக நிறைவேற்றியதில் நாடு முழுவதிலும் உள்ள, 426 ஊராட்சி ஒன்றியங்களில், பரப்பா ஊராட்சி ஒன்றியம் முதலிடத்தை பிடித்தது. டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பரப்பா ஊராட்சி ஒன்றியத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை, பிரதமர் மோடியிடமிருந்து, காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர் பெற்று கொண்டார். இவரது சொந்த ஊர், பந்தலுார் தேவாலா பகுதியாகும். கலெக்டர் இன்பசேகர் விருது பெற்றதை அறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

