/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி
/
தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி
ADDED : ஆக 31, 2025 08:19 PM

பாலக்காடு; குருவாயூருக்கு திருமண நிகழ்ச்சிக்கு மக்களை அழைத்து சென்ற தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேங்குறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 53. தனியார் பஸ் டிரைவரான இவர், கடந்த, 27ம் தேதி இரவு 11:00 மணிக்கு பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்களை, திருமண நிகழ்ச்சிக்காக குருவாயூருக்கு பஸ்சில் அழைத்து சென்றார்.
நேற்று முன்தினம் காலை திருமணம் முடிந்து, நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, கிழக்கு கோபுர நடை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மணிகண்டன் திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மணிகண்டன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.