தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு நிலத்தில் தனியார் கட்டுமான பணி: மக்கள் புகார்

 அரசு நிலத்தில் தனியார் கட்டுமான பணி: மக்கள் புகார்

 அரசு நிலத்தில் தனியார் கட்டுமான பணி: மக்கள் புகார்


ADDED : நவ 29, 2025 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், அரசு நிலத்தில் தனியார் கட்டுமான பணி மேற்கொண்டு வருவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பந்தலுார் அருகே, மாநில எல்லையில் அய்யன்கொல்லி பகுதி அமைந்துள்ளது. இதன் பஜார் பகுதியின் பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து நிலத்தை வைத்துள்ளதாக ஏற்கனவே புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், சிலர் கட்டடம் கட்ட முயன்ற நிலையில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த போது, நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தனிநபர் ஒருவர் அங்கு பெரிய அளவிலான வணிக வளாகம் கட்டும் வகையில், முதல் கட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

பொதுமக்கள் கூறுகையில்,'பஜாரின் மையப்பகுதியில், உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதனை ஒட்டி அரசு சார்ந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தனி நபர்கள் அந்த இடத்தை, ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தை மீட்க வேண்டும்,'என்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், ''இதுகுறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை நிறுத்தி நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us