விபத்தை ஏற்படுத்தும் மெகா பிளக்ஸ் பேனர்கள்: அலட்சியம் காட்டும் நகரமைப்பு அலுவலர்கள்
விபத்தை ஏற்படுத்தும் மெகா பிளக்ஸ் பேனர்கள்: அலட்சியம் காட்டும் நகரமைப்பு அலுவலர்கள்
UPDATED : ஜூன் 09, 2026 07:19 PM
ADDED : ஜூன் 09, 2026 06:51 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை காந்தி நகர் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள மெகா பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதை நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.
அருப்புக்கோட்டை திருச்சுழிரோடு, காந்திநகர் சந்திப்பு பாலம் வழியாக மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை செல்கிறது. தினமும் இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆகும். பாலத்தில் இருபுறம் உள்ள சர்வீஸ் ரோட்டில் வளைவு பகுதியில் கட்சிகள் தனியார்கள் தொடர்ச்சியாக மெகா பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றனர். இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வளைவு பகுதியில் வரும் போது அங்குள்ள பேனர்கள் மறைப்பதால் விபத்து ஏற்படுகிறது. தினமும் ஏதாவது விபத்து நடக்கிறது.
நிகழ்ச்சி முடிந்த பின்னும் பேனர்களை அகற்றுவதற்கு கட்சிகளும் சரி தனியாறும் சரி அக்கறை கொள்வதில்லை மாதக்கணக்கில் அப்படியே உள்ளது. அதன்பின், அடுத்த நிகழ்விற்கான பேனர்கள் வைக்கப்படுகிறது.
நகராட்சி நகரமைப்பு பிரிவு பேனர் நகரில் பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேனர்களை வைக்கக்கூடாது என அறிவுறுத்துவதும் இல்லை. அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதும் இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் நகரின் பல பகுதிகளில் மெகாபிளக்ஸ் பேனர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
இது குறித்து, பாலமுருகன், நகராட்சி கமிஷனர் : நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பேனர் வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்றாவிடம் நகராட்சி மூலம் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும். முக்கிய பகுதிகளில் பேனர்கள் வைக்க கூடாது என அறிவுறுத்தப்படும்.
