/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; வரும் 17ம் தேதி பங்கேற்க அழைப்பு

ADDED : அக் 14, 2025 09:01 PM
ஊட்டி; ஊட்டியில் நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம், 17ம் தேதி ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
முகாமில், 'எட்டாம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயபடிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள்,' என, அனைத்து விதமான தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில், கலந்து கொள்ள அனுமதி இலவசம். மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
முகாம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்த செய்யப்படும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், விவரங்களுக்கு, 0423-2444004 , 72000 19666 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.