/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு செல்லும் பிரியங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு
/
வயநாடு செல்லும் பிரியங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு
வயநாடு செல்லும் பிரியங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு
வயநாடு செல்லும் பிரியங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 27, 2024 11:58 PM
பந்தலுார் : தமிழகம் வழியாக, இன்று வயநாடு செல்லும் பிரியங்காவுக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்., கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. அதில், பங்கேற்பதற்காக டில்லியில் இருந்து விமான மூலம் மைசூர் வரும் பிரியங்கா, அங்கிருந்து ஹெலிகாப்டரில், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தாளூர் பகுதியில் செயல்படும் கல்லுாரி மைதானத்தில் இறங்குகிறார். அங்கு கட்சியினர் வரவேற்பு கொடுத்து பின்னர், வயநாடு பகுதிக்கு செல்கிறார்.
இந்நிலையில், ஹெலிபேட் பகுதியில் நேற்று மத்திய பாதுகாப்பு படை டி.எஸ்.பி., கார்த்திக், சி.ஆர்.பி.எப்., டி.எஸ்.பி. கண்ணன், மத்திய உளவுத்துறை அதிகாரி பிரசன்னா, தேவாலா டி.எஸ்.பி., சரவணன், பந்தலுார் துணை தாசில்தார் விஜயன் உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காங்., கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தாளூர் சுற்றுவட்டார பகுதி போலீசாரின் காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

