/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு, பணமுடிப்பு
/
அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு, பணமுடிப்பு
அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு, பணமுடிப்பு
அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு, பணமுடிப்பு
ADDED : ஜூலை 29, 2025 07:54 PM

பந்தலுார்; பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டு அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு, மகாத்மா காந்தி பொது சேவா மையம் சார்பில் பரிசு மற்றும் பண முடிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் (பொ) செந்தில்குமார் தலைமை வகித்தார். சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''மாணவ பருவத்தில் படிக்கும் செயலில் மட்டுமே முனைப்பு காட்ட வேண்டும். அதனை மாணவர்கள் மேலும் மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இது போன்ற பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது,'' என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பரிசுகள் வழங்கி பேசுகையில், ''கடந்த காலங்களில் மாணவர்கள் படிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், தற்போது படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.எனவே, மாணவர்கள் தீய பழக்கங்களில் தங்கள் எண்ணங்களை ஈடுபடுத்தாமல், படித்து முன்னேற வேண்டும்,'' என்றார்.
வனச்சரகர் சஞ்சீவி பேசுகையில், ''படிக்கும் வயதில் உள்ள மாணவர்கள் இயற்கையை பாதுகாப்பதில், ஆர்வம் காட்ட வேண்டும். இயற்கையை மாணவ பருவத்திலேயே நேசிக்க தொடங்கினால் மட்டுமே, எதிர்காலத்திலும் இயற்கையை காப்பாற்ற எண்ணம் வரும்,'' என்றார்.
தொடர்ந்து, 10-ம் வகுப்பில் சாதித்த மாணவர்கள் சஞ்சய், நிவேதா, சுபாஷ், பிரசாந்த்; பிளஸ்-2 தேர்வில் சாதித்த சுமித்ரா, பாத்திமத்து ரிப்னா, உஷா தேவி, தீபிகா ஆகியோருக்கு பரிசு மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேவா மைய நிர்வாகிகள் தாஸ், இந்திரஜித் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.