/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியின் 18வது ஆண்டுவிழா சாதித்த மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளியின் 18வது ஆண்டுவிழா சாதித்த மாணவர்களுக்கு பரிசு
பள்ளியின் 18வது ஆண்டுவிழா சாதித்த மாணவர்களுக்கு பரிசு
பள்ளியின் 18வது ஆண்டுவிழா சாதித்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 16, 2025 04:29 AM

ஊட்டி : ஊட்டி அருகே குருகுலம் பள்ளியில்,18வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் அர்ஜூணன், நிர்வாகி வாசுகி ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, கரூர் வெண்ணைமலை பரஞ்சோதி ஆசிரமத்தின் சாது சத்யானந்தா சுவாமிஜி மற்றும் துானேரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரியும் பார்வதி ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள்,' தற்போதைய கால கட்டத்தில் கல்வியின் அவசியம்; சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு; குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டிய பெற்றோரின் கடமை,' ஆகியவை குறித்து பேசினர். தொடர்ந்து, பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திரளான பெற்றோர் பங்கேற்றனர்.