/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
/
அரசு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : மே 23, 2025 06:49 AM
பந்தலுார : வங்கி பேரவை பிரதிநிதி வக்கீல் கணேசன் கூறியதாவது:
தாயகம் திரும்பிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், 11 மற்றும் 12ம் வகுப்புகளில், 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்; பத்தாம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றிருந்தால், வங்கி சார்பில் ஊக்க பரிசு வழங்கப்பட உள்ளது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சான்றோப்பமிட்ட மதிப்பெண் பட்டியல்; குடும்ப அட்டை நகல்; ஆதார் அட்டை நகல்; பெற்றோரின் வங்கி, 'அ'வகுப்பு உறுப்பினர் அடையாள அட்டை நகல்; மாணவர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மாணவர் அல்லது பெற்றோரின் ரேப்கோ வங்கி அல்லது தேசிய வங்கிசேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சந்தேகங்கள் இருந்தால், 9442443361 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.