/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேளாண் துறையில் ரூ.1 கோடியில் பதப்படுத்தும் இயந்திரங்கள்
/
வேளாண் துறையில் ரூ.1 கோடியில் பதப்படுத்தும் இயந்திரங்கள்
வேளாண் துறையில் ரூ.1 கோடியில் பதப்படுத்தும் இயந்திரங்கள்
வேளாண் துறையில் ரூ.1 கோடியில் பதப்படுத்தும் இயந்திரங்கள்
ADDED : ஜூன் 21, 2025 06:19 AM
ஊட்டி : மாவட்ட வேளாண் துறை வாயிலாக, 313 விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய்க்கு சமபங்கு மூலதனம், பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாயிலாக விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இம்மாவட்டத்தை பொறுத்தவரை, 9 உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் அரசின் நிதி உதவியுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வாயிலாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள், மலை விளைபொருட்களான, காபி, குறு மிளகு, தேயிலை ஆகியவற்றை கொள் முதல் மற்றும் விற்பனை போன்ற வணிகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலுார் வட்டாரம் பந்தலுார் பகுதியில், 313 விவசாயிகளுக்கு, 14.55 லட்சம் ரூபாய் நிறுவன மேம்பாட்டிற்கும், சமபங்கு மூலதனமாக, 6.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வாயிலாக கடந்தாண்டில் மட்டும், 5.72 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாநில அரசு, 2024- 25ம் ஆண்டுகளில், 75 லட்சம் ரூபாய் செலவில் காபி, குறு மிளகு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த, 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை, 313 விவசாயிகளுக்கு, 1 கோடி ரூபாய்க்கு சம பங்கு மூலதனம், பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.