/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மட்கும் குப்பையில் உரம் தயாரிக்க திட்டம்
/
மட்கும் குப்பையில் உரம் தயாரிக்க திட்டம்
ADDED : ஜன 28, 2025 07:23 AM
பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம், பிதர்காடு அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 'ஊராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் வகையில், அம்பலமூலாவில் மையம் அமைக்கவும், மட்கும் குப்பையை இயற்கை உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்த அனுமதி கோரப்பட்டது. பள்ளிக்கு அருகில் 'பிளாஸ்டிக்' மறு சுழற்சி திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மானிவயல் சாலையை சீரமைக்க வேண்டும்.
பிதர்காடு பகுதியில் அரசு சுகாதார துணை நிலையம் அமைக்க வேண்டும். பாக்கனா பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வேண்டும். சேதமான கிணறுகளை சீரமைக்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

