/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தார் கலவை மையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
/
தார் கலவை மையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 08:32 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், தார் கலவை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேவாலா பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பந்தலுார் ஏரியா கமிட்டி செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''தேவாலா சுற்று வட்டார பகுதி மக்களுக்கு நச்சுக்காற்றை, வினியோகம் செய்யும் தார் கலவை ஆலை மையத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பல ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பது கண்டனத்துக்குரியது.
தரம் குறைவாக கட்டப்பட்ட மையத்தின் பாதுகாப்பு சுவர் இடிந்து, இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், மேலும் பல வீடுகளும் பாதிக்கும் சூழல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுக்காமல் இருப்பது பொதுமக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. தார் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்,''என்றார். இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பாஸ்கரன் (மா.கம்யூ), பொன் மோகன்தாஸ் (நா.த), ராஜேந்திர பிரபு (வி.சி), ஜான்சன் (அ.தி.மு.க.), ரங்கநாதன் (பா.ஜ), கோபிநாதன் (காங்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றனர்.-