/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை அமைச்சருக்கு எதிராக கூடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வனத்துறை அமைச்சருக்கு எதிராக கூடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்
வனத்துறை அமைச்சருக்கு எதிராக கூடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்
வனத்துறை அமைச்சருக்கு எதிராக கூடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2025 09:04 PM
கூடலுார்; வால்பாறையில், சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து, அலட்சியமாக பதில் கூறிய, வனத்துறை அமைச்சரை கண்டித்து, கூடலுாரில் அ.தி.மு.க., உள்ளிட்ட சில கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில், கடந்த வாரம் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தார். செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அலட்சியமாக கூறிய பதில், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பேச்சை கண்டித்து, கூடலுாரில் அ.தி.மு.க., கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சியின் சார்பில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி குறித்து, அலட்சியமாக பதில் கூறிய வனத்துறை அமைச்சரை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்கவும், பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், த.வெ.க., தே.மு.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றனர்.

