ADDED : டிச 23, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; பார்லிமென்டில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, டில்லியில், ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து, ஊட்டியில் காங்., சார்பில் ஏ.டி.சி.,யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில எஸ்.டி. பிரிவு தலைவர் பிரியா நாஷ்மிகர், மாநில பொது செயலாளர் விவேகானந்தன் லஜபதி, ஊட்டி நகர தலைவர் நித்யா சத்யா உட்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
* மா.கம்யூ ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.ஐ.,(எம்) தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். தாலுகா உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர லிங்கம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.