/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் போராட்டம்
/
அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் போராட்டம்
ADDED : பிப் 09, 2024 11:18 PM
பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை தீர்த்து தர வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர்.
இதை தொடர்ந்து சங்கம் சார்பில் ரவிக்குமார் அதிகாரிகளிடம் அளித்த மனு:
புளியம்பாரா முதல் கோழிகொல்லி செல்லும் சாலை சீரமைத்து, கிராமத்தில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்; கீழ் நாடுகாணி, செட்டிவயல், இந்திரா நகர், தேவாலா முனீஸ்வரன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்.
கைத கொல்லி கிராம குடிநீர் பிரச்னை , காட்டிக்குன்னு, செட்டி வயல், இந்திரா நகர், பந்தலூர் நத்தம், தேவாலா முதல் அத்திக்குன்னா பாலம் வரையிலான சாலை ஆகிய இடங்களில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். அத்துடன் தேவையான இடங்களில் நடைபாதை அமைக்கவும், நீர்மட்டம் பகுதியில் நீர் தேக்க தொட்டியின் கொள்ளளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.