/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மறியல் போராட்டம்: 51 பேர் கைது
/
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மறியல் போராட்டம்: 51 பேர் கைது
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மறியல் போராட்டம்: 51 பேர் கைது
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மறியல் போராட்டம்: 51 பேர் கைது
ADDED : ஜன 07, 2025 11:57 PM

ஊட்டி; கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏ.டி.சி.,  பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்திற்கான பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைவர் கருணாகரன், அப்பாதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதில், 51 பேரை போலீசார் கைது செய்தனர்.