/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் பி.எப்., கட்ட தவறிய நிறுவனம், பள்ளி சொத்துக்கள் பறிமுதல்: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை

ADDED : ஜூன் 27, 2025 08:56 PM
குன்னுார்:
நீலகிரியில், தொழிலாளர்களுக்காக பி.எப்., வைப்பு தொகையை செலுத்த தவறிய தனியார் நிறுவனம் மற்றும் பள்ளியின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை, வருங்கால வைப்பு நிதி நிறுவன மீட்பு அதிகாரி சுரேந்திர குமார் வெளியிட்ட அறிக்கை:
வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட, கோத்தகிரி எல்.கே.ஜி., பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த, 2024 ஏப்., முதல் 2019 ஜூலை வரையிலான, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 18 லட்சத்து 68 ஆயிரத்து 504 ரூபாயை கட்ட தவறிவிட்டது.  நிறுவனத்திற்கு போதுமான வாய்ப்பு வழங்கியும், சிவராஜ் போரையா , நிலுவை தொகையை செலுத்த தவறி விட்டார்.
அதே போல், கக்குச்சியில், மகாத்மா காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த, 2018 ஏப்., முதல் 2023 மார்ச்  வரையில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 28 லட்சத்து 49 ஆயிரத்து 763 ரூபாயை பள்ளி அறங்காவலர்கள் இதனை கட்ட தவறி விட்டனர்.
இதனால், கோத்தகிரியில் உள்ள மார்வல்லா எஸ்டேட்டின் சொத்து மற்றும் கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளியின் ஒரு பகுதி ஆகியவை, வருங்கால வைப்பு நிதி மீட்பு, அமலாக்க அதிகாரி ஹரிஷ் நம்பூதிரி மூலமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சொத்தானது, மதிப்பீட்டிற்கு பிறகு பொது ஏலத்தில் விடப்பட்டு நிலுவைத்தொகை மீட்கப்படும். இவ்வாறு  சுரேந்திர குமார் கூறியுள்ளார்.