/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
ADDED : மே 01, 2025 04:43 AM
ஊட்டி : நீலகிரியில், 128 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரை, ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் வட்டத்தில் , மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''மாநில அரசு மாற்று திறனாளிகளின் தேவையை அறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றன. அதன்படி, நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் திறம்பட வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 128 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.