/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழுமை பெறாத நடைபாதை தடுக்கி விழும் பொது மக்கள்
/
முழுமை பெறாத நடைபாதை தடுக்கி விழும் பொது மக்கள்
ADDED : அக் 07, 2025 12:00 AM

கோத்தகிரி:கோத்தகிரி காமராஜர் சதுக்கம், ராமச்சந்த் இடையே, முழுமை பெறாத நடைபாதையால், மக்கள் தடுக்கி விழுகின்றனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து, நகர பகுதிகள் உட்பட, கிராமப்புறங்களின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவர நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காமராஜர் சதுக்கத்தில் இருந்து, ராம்சந்த் பகுதிக்கு செல்ல, நேரு பூங்காவை ஒட்டி, நகராட்சி நிர்வாகம், நடைப்பாதை அமைத்துள்ளது.
இந்த நடைப்பாதையை, நாள்தோறும் பள்ளி மாணவர்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், சேதமடைந்த நடைபாதையில் சீரமைப்பு பணி நடந்தது.
ஆனால், பணி முழுமை பெறாமல் உள்ளது. இதனால், நடந்து செல்வோர், குழியில் விழுந்து, காயமடைந்து வருவது தொடர்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம், விடுபட்ட நடைபாதை பணியை முழுமையாக நிறைவடைய செய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.