/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
/
சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ADDED : பிப் 19, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி ; ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில், 200 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தை சுற்றிலும், தேயிலைதோட்டங்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடியிருப்புகள் அருகே சிறுத்தை நடமாடி வருகிறது.
தேயிலை பறிப்பது உள்ளிட்ட விவசாய பணிகள் அச்சத்திற்கு இடையே, மேற்கொள்ள வேண்டியநிலை உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுக்காக, சிறப்பு வகுப்புகளை முடித்து இரவு, 7:00 மணிக்கு மேல், வீடு திரும்பும் மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்து காட்டு பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.