/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்
/
காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்
ADDED : செப் 29, 2025 10:00 PM

கூடலுார்:
கூடலுார் நகரை ஒட்டிய குடியிருப்பு சாலையில் உலா வந்த காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் நகரை ஒட்டிய வனப்பகுதியில், மக்னா என்ற காட்டு யானை, இரவு நேரங்களில் நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று காலை ராஜகோபாலபுரம் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டிய சாலையில் ஆக்ரோசமாக நடந்து சென்ற யானையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். இளைஞர்கள் சிலர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனால், அச்சமடைந்துள்ள மக்கள், 'இந்த யானையால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், வனத்துறையினர் உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.