/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்; கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு
/
ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்; கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு
ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்; கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு
ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்; கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு
ADDED : ஆக 15, 2025 09:23 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, கப்பாலா பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், ஆதார், ரேஷன் அட்டையை கிராம மக்கள் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, கப்பாலா பகுதியில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் ஷோனி வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி தலைமை வகித்தார்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற, மக்கள் வாழ்வாதார இயக்க நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், 'சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் மனித- விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வனத்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளோம்,' என, தெரிவித்தனர். தொடர்ந்து, கருத்தாடு கிராம பழங்குடியின மக்கள் மற்றும் இதர சமுதாய மக்கள், 'கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில், சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. வனத்துறை தீர்வு காணவில்லை,' என தெரிவித்தனர். இந்த இரு குழுவினரும், ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, வங்கிபுத்தகம் ஆகியவற்றை கிராம சபையில் ஒப்படைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இதுகுறித்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு செய்தும், உயர் அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து, அனைவரும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் கூறுகையில், ''மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, கிராம சபைக்கு பங்கேற்க வேண்டும். புறக்கணிக்க கூடாது,'' என்றார். எனினும், அவர்கள் பங்கேற்றவில்லை.
இதை தொடர்நது, ஆவணங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால், கிராமசபையில் விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றாமல் முடிந்தது. பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.