/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அஞ்சலகத்தில் 10 சேமிப்பு திட்டங்கள்; கணக்கு துவக்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
/
அஞ்சலகத்தில் 10 சேமிப்பு திட்டங்கள்; கணக்கு துவக்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
அஞ்சலகத்தில் 10 சேமிப்பு திட்டங்கள்; கணக்கு துவக்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
அஞ்சலகத்தில் 10 சேமிப்பு திட்டங்கள்; கணக்கு துவக்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
ADDED : ஜன 16, 2025 10:36 PM
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும். அஞ்சலகத்தில் நிறைய சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. பெரும்பாலான சேமிப்பு திட்டங்கள் வங்கிகள் தரும் வட்டியை விட கூடுதல் வட்டி தரக்கூடிய திட்டமாக உள்ளது.
குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு, 6.9 சதவீதம் வட்டி, அதிகபட்சமாக, 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு, 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சேமிப்பு திட்டங்கள் என்னென்ன ?
சேமிப்பு கணக்கு ஐந்து ஆண்டுகள் தொடர் சேமிப்பு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொதுமக்கள் வைப்பு திட்டம், மாதந்தோறும் வட்டி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மகிளா சம்மான் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் முன்மாதிரி திட்டங்களாக உள்ளது. முக்கியமாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் ஒருவேளை ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால், 55 வயதுக்கு பிறகும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக இருந்தால், 50 வயதுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலேயே இந்தத் திட்டத்திற்கு தான் அதிக வட்டி தரப்படுகிறது. இதன் வட்டி விகிதம், 8.2 சதவீதமாகும். நீலகிரியில் உள்ள அஞ்சலகங்களில் சமீப காலமாக மேற்கண்ட, 10 திட்டத்தில் ஏராளமானோர் சேர்ந்து சேமிப்பு கணக்குகளை துவக்கி உள்ளனர்.