/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் சந்திப்பு பிரசாரம்; போலீஸ் எச்சரிக்கையால் நிறுத்தம்
/
மக்கள் சந்திப்பு பிரசாரம்; போலீஸ் எச்சரிக்கையால் நிறுத்தம்
மக்கள் சந்திப்பு பிரசாரம்; போலீஸ் எச்சரிக்கையால் நிறுத்தம்
மக்கள் சந்திப்பு பிரசாரம்; போலீஸ் எச்சரிக்கையால் நிறுத்தம்
ADDED : ஜன 03, 2024 11:42 PM
அன்னூர் : அருந்ததியர் கோரிக்கை குறித்த பிரசாரம் போலீசார் எச்சரிக்கையை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்டது.
அன்னூர் அருகே குமாரபாளையம் காலனியில், கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை சார்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நேற்று நடந்தது. பட்டியலின மக்களில் மிகவும் பின் தங்கியுள்ள அருந்ததியர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வீடு, வீடாக, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து பிள்ளையப்பம்பாளையத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். அப்போது நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அன்னூர் போலீசார் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்கு போலீசாரிடம் முன் அனுமதி பெறவில்லை. எனவே, அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரித்தனர்.
நிர்வாகிகள்,' நாங்கள் ஒலிபெருக்கி அமைக்கவில்லை. வீடு வீடாக துண்டு பிரசுரம் மட்டுமே விநியோகிக்கிறோம்,' என்று கூறினர்.
ஆனாலும் முன்அனுமதியில்லாமல் பிரசாரம் செய்ய கூடாது என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரசாரத்தை பாதியில் நிறுத்திய பேரவை நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.