'பொதுமக்கள் வனத்துக்குள் செல்வதை தவிர்க்கணும்' ;ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுரை
'பொதுமக்கள் வனத்துக்குள் செல்வதை தவிர்க்கணும்' ;ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுரை
UPDATED : மே 13, 2026 06:15 PM
ADDED : மே 13, 2026 06:14 PM
ஊட்டி: நீலகிரியில் மனித- விலங்கு மோதல்களை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்தது.
அதில், மாவட்டத்தில் மனித -விலங்கு மோதல்கள் ஏற்படும் பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, யானைகள், புலிகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதில், கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில்,''பொதுமக்கள் வனப்பகுதிக்குள் தேவையற்ற முறையில் செல்வதை தவிர்க்க வேண்டும்; வனவிலங்குகள் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மனித உயிர் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் பிரச்னைகளை தவிர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மனித விலங்கு மோதல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், சோலார் மின் வேலி பராமரிப்பு பணிகளை விரைவுப்படுத்துதல் மற்றும் அவசரகால மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், எஸ்.பி.நிஷா, மாவட்ட வன அலுவலர் தேவராஜ், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் கணேஷ், வித்யாதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
