/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எழுத்து பிழையுடன் வழங்கப்பட்ட தள்ளு வண்டிகள்
/
எழுத்து பிழையுடன் வழங்கப்பட்ட தள்ளு வண்டிகள்
ADDED : மார் 09, 2024 07:14 AM

பந்தலுார் : பந்தலுார், நெல்லியாளம் நகராட்சி சார்பில், 'தீனதயாள் அந்தியோதய யோஜனா' திட்டத்தின் கீழ், தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதி மூலம், சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை வைத்துள்ள, வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
அதில், நெல்லியாளம் என்பதற்கு பதில், 'நெல்லியாழம்' என நகராட்சி பெயரை எழுதி வைத்து உள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் சாலை ஓரங்களில், இதுபோல் நகராட்சியின் பெயரை எழுத்து பிழையுடன், வைத்திருப்பது உள்ளுர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிலர் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

