டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : ஏப் 21, 2024 10:32 PM
மேட்டுப்பாளையம்;
வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், தெருக்களில் மேய்ந்து திரியும் பசு, காகம், குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு வீட்டு வாசலில் தண்ணீர் வைத்து தாகம் தணிக்கலாம்.கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார், அன்னுார், காரமடை, மதுக்கரை, செட்டிப்பாளையம், சூலுார், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறவை மாடுகள், ஆடுகள், நாட்டு கோழிகள் என 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன.கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பசுக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காரமடை மாதப்பனுாரில் உள்ள ஸ்ரீ பகவத் ராமனுஜர் கோ ரக்ஷண சாலா கோசாலை பராமரிப்பாளர் சடகோப ராமனுஜதாசன் கூறுகையில், ''வெயில் வாட்டி வதைத்து வருவதால், பல்வேறு இடங்களிலும் வறட்சி அதிகரித்துள்ளது. தினமும் பசுக்களுக்கு இரண்டு முறை தண்ணீர் காட்ட வேண்டும்.தெருக்களில் மேய்ந்து திரியும் பசுக்கள், பறந்து வரும் பறவைகளுக்கு அப்பகுதி மக்கள், தங்களது வீட்டு வாசலில் தண்ணீர் வைத்து, அதனை காப்பாற்ற வேண்டும். மனிதர்களாகிய நாம் பறவை, பசுக்களை புரிந்து கொண்டு அதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். அது புண்ணியமும் கூட,'' என்றார்.---