தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மானிய விலையில் உரம் பெற இனி கியூ.ஆர்., குறியீடு கட்டாயம்! விளைவிக்கும் பயிர் விபரங்களை தெரிவிப்பதும் அவசியம்

மானிய விலையில் உரம் பெற இனி கியூ.ஆர்., குறியீடு கட்டாயம்! விளைவிக்கும் பயிர் விபரங்களை தெரிவிப்பதும் அவசியம்

மானிய விலையில் உரம் பெற இனி கியூ.ஆர்., குறியீடு கட்டாயம்! விளைவிக்கும் பயிர் விபரங்களை தெரிவிப்பதும் அவசியம்


ADDED : நவ 23, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்ட விவசாயிகள், சாகுபடி செய்யும் நிலத்தில் விளைவிக்கும் பயிர் விபரங்களை அறிவித்து, கியூ.ஆர்., குறியீடு பெற்றால் மட்டுமே, மானியத்தில் உரங்களை பெற முடியும் என்ற நடைமுறையால், வெளியிடங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் குளறுபடிகள் தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம், 25 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு,கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், வெள்ளைப் பூண்டு உள்ளிட்டவைகள் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. மழை பொழிவு குறைந்தால் தோட்டக்கலைத் துறை சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவித்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் விளையும் பயிர்களுக்கு யூரியா, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் போன்ற மானிய உரங்களை விவசாயிகள பயன்படுத்துகின்றனர்.

உரம் பெற புதிய நடைமுறை



இந்நிலையில், உரங்களை பெறுவதில் தற்போது புதிய நடைமுறை வர உள்ளது. அதன்படி, பயிர் செய்யும் நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு விபரத்தோடு, உரம் வாங்கும் கடையின் பெயருடன், இதற்கென மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட செயலியில், விவசாய அடையாள எண் அல்லது ஆதார் எண் கொண்டு பதிவு செய்து, ‘கியூ.ஆர்.,’ குறியீடு பெற வேண்டும்.

இதை கொண்டு குறிப்பிட்ட கடையில் சென்று பதிவு செய்த நாளோடு சேர்ந்து, 3 நாட்களுக்குள் உரம் வாங்க வேண்டும். ‘கியூ ஆர்.,’ குறியீடு பெற்ற பின்னர் உரம் வாங்க வேண்டாம் என்று நினைத்தால், அதனை விவசாயி ரத்து செய்யலாம். மூன்று நாட்களுக்குள் வாங்க விட்டால் அந்த குறியீடு தானாகவே ரத்தாகிவிடும்.

விவசாயி அடையாள எண்



மேலும், விவசாயி அடையாள எண் பெற்றுள்ளவர்கள், தங்கள் அடையாள எண் அல்லது ஆதார் எண் ஆகியவை மொபைல் செயலியில் ஓ.டி.பி., வாயிலாக சரிபார்க்கப்பட்ட பின்னர், நிலம், பரப்பு விவரங்கள் ஆகியவை மொபைல் திரையில் தானாகவே வரும். சொந்தமாக நிலம் இருந்தும் விவசாயி அடையாள எண் பெறாதவர்கள், தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓ.டி.பி., வாயிலாக சரிபார்த்து தங்கள் சர்வே எண் விவரங்களை தேர்வு செய்யலாம்.

நிலத்தின் விவரங்கள் தானாக திரையில் வராவிட்டால் அவற்றை அந்த விவசாயி குறிப்பிடலாம். பின்னர் விவசாயி தன் ஒவ்வொரு நிலத்திலும் சாகுபடி செய்ய உள்ள பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், தேவையான உரங்கள் பெயர், தேவையான அளவு ஆகியவற்றை பதிவு செய்யலாம்.

வேளாண்மை உதவி இயக்குனர் தர்மலிங்கம் கூறுகையில்‘‘ இந்த திட்டத்தில், விவசாயிகள் தாங்கள் எந்த கடையில் இருந்து உரம் வாங்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். ஒரே கடையில் எல்லா உரங்களும் இல்லாவிட்டால், ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை தேர்வு செய்யலாம். இத்திட்டம் அமலுக்கு வந்தவுடன் மேற்காணும் முறைப்படி விவரங்களை சமர்ப்பித்து கியூ.ஆர்., குறியீடு பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட கடைகளில் காண்பித்தால் மட்டுமே மானிய உரங்கள் வாங்க முடியும். இதனால், பல்வேறு குளறுபடிகள் தவிர்க்கப்படும்,’’என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us