தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வினாடி - -வினா போட்டி: 108 மாணவர்கள் பங்கேற்பு

 வினாடி - -வினா போட்டி: 108 மாணவர்கள் பங்கேற்பு

 வினாடி - -வினா போட்டி: 108 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : நவ 29, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கூடலுாரில் மாவட்ட அளவில் நடந்த வினாடி--வினா போட்டிகளில், 36 பள்ளிகளை சேர்ந்த 108 மாணவர்கள் பங்கேற்றனர்.

கூடலார் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள, ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன கட்டடத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையே மாவட்ட அளவிலான வினாடி, வினா போட்டி நேற்று நடந்தது.

துளிர் திறன் அறிதல் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். போட்டிகளுக்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.

போட்டிகளின் நடைமுறைகள் குறித்து அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிவாசகம், கருணாநிதி விளக்கினர்.

தமிழ் மற்றும்ஆங்கில வழியில் நடந்த போட்டிகளில், ஜூனியர் பிரிவில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், சீனியர் பிரிவில், 9,10ம் வகுப்பு மாணவர்கள், சூப்பர் சீனியர் பிரிவில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.

கூடலுார் அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அர்ஜுனன், அமுதேஸ்வரன், மகேஸ்வரன், கார்த்தி, இளங்கோவன், திருமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கான வினாடி, வினா போட்டிகளை நடத்தினர். போட்டிகளில், 36 பள்ளிகளை சேர்ந்த 108 மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் சங்கர் கூறுகையில்,''ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் குழுவினர், மாநில அளவில் நடக்கும் வினாடி - - வினா போட்டியில் பங்கேற்பர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us