/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல்கள் தலைப்பில் வினாடி-வினா போட்டி
/
தேர்தல்கள் தலைப்பில் வினாடி-வினா போட்டி
ADDED : ஜன 18, 2024 01:49 AM
ஊட்டி, : 'இந்தியாவின் தேர்தல்கள்' என்ற தலைப்பில் நடைபெறும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் அதிகளவில் பங்கேற்கும் வகையில், 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு,'ஸ்லீப்' திட்டப்படி, மாநில அளவில் பொதுமக்களுக்கான வினாடி-வினா போட்டி, வரும், 21ம் தேதி, காலை, 11:00 மணிமுதல், 11:15 மணி வரை நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 'https://www.erolls.tn.gov.in Quize2024' என்ற இணையத்தளத்தில் வரும், 18 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு நாட்கள் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். பங்கேற்பாளர்கள் மொபைல் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கண்டிப்பாக உள்ளீடு செய்ய வேண்டும். இப்போட்டி, 'இந்தியாவின் தேர்தல்கள்' என்ற தலைப்பில் நடைபெறும்.
மேலும், விபரங்கள் தேவைப்படுவோர், மாநில உதவி மைய எண் : 1800-4252-1950 மற்றும் மாவட்ட உதவி மைய எண் : 1950 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.