/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காமராஜர் சதுக்கத்தில் ராகுல் பிறந்த நாள் விழா
/
காமராஜர் சதுக்கத்தில் ராகுல் பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 21, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரியில் காங்., தேசிய பொது செயலாளர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் பில்லன், கமல சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதில், தோழமை கட்சியான தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உட்பட, பலர் பங்கேற்றனர்.