/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல்லியாளம் நகராட்சியில் 'ரெய்டு' கணக்கில் வராத ரூ. 3.37 லட்சம் பறிமுதல்
/
நெல்லியாளம் நகராட்சியில் 'ரெய்டு' கணக்கில் வராத ரூ. 3.37 லட்சம் பறிமுதல்
நெல்லியாளம் நகராட்சியில் 'ரெய்டு' கணக்கில் வராத ரூ. 3.37 லட்சம் பறிமுதல்
நெல்லியாளம் நகராட்சியில் 'ரெய்டு' கணக்கில் வராத ரூ. 3.37 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 26, 2024 06:44 AM

பந்தலுார்: பந்தலுார், நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத, 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரில், நெல்லியாளம் நகராட்சி செயல்பட்டு வருகிறது. இங்கு தி.மு.க.,வை சேர்ந்த பழங்குடியின பெண் சிவகாமி தலைவராக உள்ளார். நகராட்சியில் கடந்த சில மாதங்களாக, தலைவர், கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் இடையே 'பனிப்போர்' நிலவி வந்தது.
இந்நிலையில், நகராட்சி தலைவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிக அளவில், 'கமிஷன்' கேட்டு தொல்லை படுத்துவதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,ஜெயக்குமார், சப்--இன்ஸ்பெக்டர் சத்யபிரியா, தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான, 5- பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தலைவர் அறையில், 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.
தொடர்ந்து, தலைவர் சிவகாமி, துணைத்தலைவர் நாகராஜ்; பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியம்; நகராட்சி பணியாளர்கள் பிரபு, சோமன்; நகராட்சி ஒப்பந்ததாரர்கள் அபுதாகிர், சக்கீர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
டி.எஸ்.பி., கூறுகையில்,'நேற்று முன்தினம் நகராட்சி பொது நிதியில், 21 பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில், 11 ஒப்பந்ததாரர்களிடம் தலைவர், 8 சதவீதம் கமிஷன் பெற்றதில், இந்த தொகையை வாங்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை முடிந்த பின்பு முழு விபரம் கூறப்படும்,' என்றனர்.