/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கண்கொள்ளாத ரயில்வே நிர்வாகம்
/
ஆற்றில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கண்கொள்ளாத ரயில்வே நிர்வாகம்
ஆற்றில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கண்கொள்ளாத ரயில்வே நிர்வாகம்
ஆற்றில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கண்கொள்ளாத ரயில்வே நிர்வாகம்
ADDED : ஜூன் 12, 2025 11:33 PM
குன்னுார்; 'குன்னுார் மலை ரயில் நிலைய பணிமனை அருகே ஆற்றோரத்தில், நீலகிரியில் தடை செய்த குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த, 25 ஆண்டுகளாக மாவட்டத்தில் பிளாஸ்டிக், பேப்பர் கப் உட்பட, 19 வகையான பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. கடந்த, 2019 ஆக., 15 முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தடை விதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் சோதனை செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மலை ரயில் நிலையங்களில் 'பிளாஸ்டிக்' தடையை முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. குன்னுார் ரயிலில் கொண்டு வரும் 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள் உட்பட குப்பை கழிவுகளை ரயில்வே நிர்வாகம் அலட்சியத்தால் ஆற்றில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
மத்திய அரசு 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குன்னுார் மலை ரயில் நிலைய அதிகாரிகள், குப்பைகள் அகற்ற மெத்தனம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.