sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மலை ரயில் இன்ஜினில் திடீர் தீ; அணைத்த 'ரயில்வே பைலட்'

/

 மலை ரயில் இன்ஜினில் திடீர் தீ; அணைத்த 'ரயில்வே பைலட்'

 மலை ரயில் இன்ஜினில் திடீர் தீ; அணைத்த 'ரயில்வே பைலட்'

 மலை ரயில் இன்ஜினில் திடீர் தீ; அணைத்த 'ரயில்வே பைலட்'


ADDED : ஜன 06, 2026 06:04 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுாரில் சுற்றுலா பயணிகள் வந்த மலை ரயில் கோச்களை நிறுத்தி, பணிமனைக்கு வந்த 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினில், திடீரென தீப்பிடித்ததை தொடர்ந்து, 'ரயில்வே பைலட்' உடனடியாக அணைத்ததால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் ஊட்டிக்கு காலை, 7:10 மணிக்கு, 4 கோச்களுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினில் குன்னுார் வரை இயக்கப்படும். பிறகு, கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு டீசல் இன்ஜினில் ஊட்டிக்கு செல்கிறது.

நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு, 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், குன்னுாருக்கு காலை, 10:15 மணிக்கு வந்தது. முதல் பிளாட்பார்மில் கோச்களை நிறுத்தி, இன்ஜின் மட்டும் தனியாக பணிமனைக்கு சென்றது. அப்போது, ரயில் இன்ஜினின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனை அறிந்த ரயில் பைலட் உடனடியாக, தீயணைப்பான் கருவியுடன் வந்து தீயை அணைத்தார். இங்கு தீப்பிடித்து உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கான காரணங்கள் குறித்து, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us